நல்வரவு_()_


Thursday 16 November 2017

தானாக வந்த வைரவர்:)


லங்கையில் இருந்த காலத்தில் எப்பவும் வீட்டில் ஒரு நாயும், பூனையும் நம்மிடம் இருக்கும்.  பின்னர் நாட்டுப்பிரச்சனைகள் அதிகமாக, கொஞ்சக்காலம் சொந்த ஊரில் போய் இருந்தோம். அப்போ இனி எந்தப் பிராணியும் வளர்ப்பதில்லை, என மனதில் நினைத்தாயிற்று. எங்கள் ஊரில் ஒரு வழக்கம் இருந்தது [இப்ப குறைந்துவிட்டது, இல்லாமல் போய் விட்டதென்றும் சொல்லலாம்:(].

ஒருவர் வீட்டிலிருந்து, அடுத்தவர் வீட்டுக்குப் போவதாயின், முன் கேற் வழியாகப் போகத் தேவையில்லை. ஒரு வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் இடையேயுள்ள வேலியிலே "பொட்டு" என்று சொல்வார்கள். அது எப்படி என்றால், ஒரு 3 அடி உயரத்தில் "n" வடிவத்திலே அழகாக நிலத்திலிருந்து வெட்டிவிடுவார்கள் வேலியை. சின்னப் பிள்ளைகள் நாய் பூனை எல்லாம் போய் வரலாம். பெரியவர்கள் இருந்து/ குனிந்து போக வேண்டும். இப்பாதையைப் பெண்களும் குழந்தைகளுமே பாவிப்பார்கள். ஆண்களெல்லாம் கேற்றைத்தான் பாவிப்பார்கள்.

ஊர் என்பதால் பெரும்பாலும் அந்த ஏரியா முழுவதும் ரத்த பந்தமாகவே இருப்பதால், இப்படி ஒரு முறை வந்திருக்கலாம். ஒரு குறிப்பிட்ட வீடுகளுக்கு மாத்திரம் இப்படித் தொடர்பு இருக்கும். பக்கத்துக் கோயிலுக்கு/ கடைக்கு போவதானால்கூட, இந்த உள் பாதையாலே போவார்கள். அப்போ, போக வர ஒவ்வொரு வீட்டுக்காரரோடும் கதைத்துக் கதைத்துப் போவார்கள். பிள்ளைகளும் இதேபோல் அடுத்த வீடுகளுக்குப் போய் விழையாடி வருவார்கள், அதனால் பாதுகாப்பும் அதிகம். பின்னர் மதில் வந்த போதும் பெரும்பாலும் மதில் கட்டியவர்களும் பழக்கத்தை மாற்றாமல், ஒரு சிறிய கேற் போட்டார்கள்.

இதேபோல் எங்கள் வீட்டுக்கு பின்னாலே இருந்த வீட்டுக்காரர்கள், தம் மகளுக்காக, எங்கள் பின் மதிலோடு, புதிதாக வீடு கட்டி, மகளுக்குத் திருமணம் முடித்துக் கொடுத்தார்கள். எங்கள் வழக்கப்படி, மாப்பிள்ளைதானே பெண் வீட்டுக்கு வந்திருப்பார். அதேபோல் இப்புது மாப்பிள்ளையும் அப் புதுவீட்டுக்கு வந்து, மனைவியுடன் குடியேறினார். அவர் வேறு ஊர்க்காரர் என்பதால், அவருக்கு தன் வளவால் மற்றவர்கள் போய்வருவது பிடிக்கவில்லை:). எங்கள் மதிலில் கேற் இருந்தபடியால் அதை அவர் ஒன்றும் செய்ய முடியாது போயிற்று.

அதனால் தன் வீட்டுக்கு அடுத்தவர்கள் வந்துபோகும் அந்த "பொட்டுப் பாதையை" மறிக்க நினைத்தார்:). அவரும் நல்லவர்தான், பயந்த சுபாவமுடையவர், பெரிதாக யாரோடும் கதைக்க மாட்டார், கொஞ்சம் கூச்ச சுபாவமுடையவர். அதனால் அவரால், யாருக்கும் வாயால் சொல்ல முடியவில்லை, இப்பாதையைப் பாவிக்க வேண்டாம் என்று. அவர் மனைவியும் எதையும் பொருட்படுத்தமாட்டார், நீங்கள் சொல்வதைச் சொல்லுங்கள் என்பதுபோல், தான் முன்பு பழகியபடியே அப்பாதையை பாவித்தார்.

இதனால் புது மாப்பிள்ளை, பாதைக்கு கல்லு வைத்து தடுத்தார். போய் வருபவர்கள் கல்லை எடுத்துப் போட்டுவிட்டுப் போனார்கள். தடிகள் வைத்து மறித்தார், அதையும் இழுத்து எறிந்துவிட்டுப் பாதையைத் தொடர்ந்து பாவித்தார்கள்[ஹா ஹா ஹா ஏனெனில் இரு பரம்பரை பரம்பரையாக இருந்து வருகிறது]. 

எதுவுமே சரிவராததால், புது மாப்பிள்ளை யோசித்தார், இனி நல்ல சாதி நாய் ஒன்று வளர்த்தால் ஆட்களைத் தடுக்கலாம் என்று. தன் நண்பன் ஒருவரிடம் "அல்ஷேஷன் குறொஸ்" ஒன்று இருந்தது, அதன் குட்டியைக் கேட்டு வைத்தார். அது குட்டி போட்டு கிட்டத்தட்ட நான்கு மாதக் குட்டியாக ஒரு குட்டியை வாங்கி வந்தார். அல்ஷேஷன் சாதி என்பதால், நான்கு மாதத்திலேயே நல்ல உயரம்கு, பளபள எனும் சுத்தக் கறுப்பு நிறம். குரலும் ஒரு கம்பீரம். குலைத்தால் அதிரும். அக்குட்டியை அவரது நண்பரோடு கொண்டுவந்து இவர் தன் முற்றத்து சண்ஷெட் தூண் ஒன்றில் கட்டியாச்சு.

ஆனால் இவருக்கும் நாயென்றால் கொஞ்சம் பயம்போல:). அதனாலோ என்னவோ, அக் குட்டிக்கு கிட்டப் போகப் பயந்தார். இதைக்கண்ட அக்குட்டி, இவரைப் பார்த்து குலைக்கத் தொடங்கிவிட்டது. இவர் மனைவி சொல்லிக்கேட்டது, உங்களுக்கேன் தேவையில்லாத வேலை என்று. ஒரு இரவு முடிந்துவிட்டது. இவர், குட்டிக்கு கிட்டப் போகவுமில்லை, குட்டியை அவிழ்த்து விடவுமில்லை:). அடுத்தநாள் விடிய எப்படியோ ஒரு மாதிரி சங்கிலியைக் கழட்டி விட்டார். கழட்டியதும், பின்னர் கட்டுவதற்காகக் கிட்டப் போனார், அது குலைக்கத் தொடங்கிவிட்டது.

இவர் பின்னாலே மெதுவாகப் போனார், எங்கள் பின் கேற் திறந்திருக்கிறது, குட்டி அதனூடாக எங்கள் பின் வாசலுக்கு வந்துவிட்டது. அவரும் பின்னாலே சங்கிலியோடு வந்தார். எனக்கு அக் குட்டியையும் அதன் முகத்தையும் பார்த்ததுமே அப்படியே மனம் பிடித்துவிட்டது. எமக்கு நாய் பூனை வளர்த்துப் பழக்கமென்பதால், நான் எங்கள் பரம்பரை நாயாரின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன், குட்டி வாலாட்டியபடி என்னருகில் வந்தது.

தடவியபடியே சொன்னேன், இப்போ சங்கிலியைக் கொண்டு வந்து கட்டுங்கோ என்று. அவரைப் பார்த்தாலே குட்டி உறுமியது. அவரது குரல், அதன் காதில் கேட்டதும் பெரிதாகக் குலைத்தது. இதனால் பயந்துபோய், அவர் சங்கிலியை என்னிடம் தந்து சொன்னார், ஒருக்கால் கட்டிவிடுவீங்களோ என்று. நான் கட்டிவிட்டேன், அப்போ அவர் சொன்னார், கொஞ்ச நேரம் குட்டி இங்கே இருக்கட்டும், நான் பின்னர் வந்து கூட்டிப் போகிறேன் என்று போய்விட்டார். நான் எங்கள் மரமொன்றில் கட்டி சாப்பாடும் போட்டேன், அது சாப்பிட்டு விட்டு நித்திரை கொண்டது. ஆனால் மதில்கரையில் அவர் குரல் கேட்டால் மட்டும் பெரிதாகக் குலைத்தது ஹா ஹா ஹா..

எனக்கென்னவோ அந்த நாய்க்குட்டியை, விட மனமே இல்லை. அம்மாவிடம் சொன்னேன், நாங்களே வளர்ப்போம் என்று. அம்மா சொன்னா, இது அவருடையதுதானே, ஆனால் அவரிடம் இக்குட்டி போகும்போல் தெரியவில்லை, எதற்கும் பொறுத்துப் பார்ப்போம் என்று. பின்னேரம் ஆகியது. புது மாப்பிள்ளை மதிலால் எட்டிப்பார்த்துச் சொன்னார், ஒருக்கால் நாய்க்குட்டியைக் கொண்டுவந்து எங்கள் தூணில் கட்டிவிடுவீங்களோ என்று. குரல் கேட்டதும், கண்விழித்த குட்டி குலைக்கத் தொடங்கிவிட்டது. அம்மா சொன்னா, நீங்கள் வந்து அவிழ்த்துக்கொண்டு போங்கோ என்று.

மாப்பிள்ளை நல்ல உஷாராக வந்தார். நாய்க்குட்டி எழும்பிப் பாய்ந்து பாய்ந்து குரைத்தது. அவருக்குக் கோபம் வந்துவிட்டது, ஏய் சத்தம் போடாதே என உறுக்கிப்பார்த்தார். அது விடாமல் குரைத்தது, எனக்கும் அம்மாவுக்கும் சிரிப்பை அடக்கமுடியாமல் அவதிப்பட்டோம். கடைசியில் அவருக்கு முடியாமல் போகவே, சொன்னார் கொஞ்ச நாள் இங்கேயே இருக்கட்டும் என்று. அன்றுமுதல் அக்குட்டிக்கு எங்கள் பரம்பரைப் பெயரை வைத்து வளர்க்கத் தொடங்கினோம்.
=======================INTERVAL========================
=======================INTERVAL========================
 நான் தான் அதன் எல்லாப் பொறுப்பும். எல்லாமே நேரத்துக்குச் செய்வேன். காலையில் கட்டுவது, மாலையில் சாப்பாடு வைத்துவிட்டு, அவிட்டுவிடுவது. பகலில் தேவைப்பட்டால் அவிழ்ப்பது. எல்லோரையுமே வழமைபோல் எங்கள் வளவால் போய்வர நாய்க்குட்டி அனுமதித்தது. ஆனால் சிலபேரை மட்டும் கண்டாலே அவருக்குப் பிடிக்காது. அந்தப் புதுமாப்பிள்ளை நம் வளவினுள் கால் வைக்கவே முடியாது:), மதிலால எட்டிப் பார்த்தாலே வள் வள் எனக் கத்தியது.. ஹா ஹா ஹா:).

அதை நாய்க்குட்டி என்று சொல்வதே தப்பெனப் படுகிறது. கதைக்க மட்டும் தெரியாதே தவிர, மற்றதத்தனையும் அதற்குத் தெரியும். நாம் சொல்வதெல்லாம் புரிந்துகொள்ளும், பதிலுக்கு தானும் ஊ..... ஊ..... என என்னோடு கதைக்கும். என் சட்டையில் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல், வாயால் என் சட்டையைக் கடித்து இழுப்பார். எனக்கு பொழுது போகாதுவிட்டால், முற்றத்தில் நின்று, அவர் பெயரைச் சொல்லி, என் கையை உயர்த்தி இரு விரல்களால் சுண்டுவேன், உடனே விளையாடத் தொடங்கிவிடுவார். ஆளும் நல்ல உயரம். என் தோள்வரை பாய்ந்து பாய்ந்து விழையாடும், விடவே மாட்டுது, கடைசியில் நான், அம்மா, அம்மா என்று கத்தினால், அம்மா "டேய்" என்று ஒரு குரல் கொடுத்தால் போதும், மிக நல்ல பிள்ளையாக கண்ணை உருட்டி உருட்டிப் பார்க்கும் அம்மா எங்கே நிற்கிறா என்று. அம்மாவைக் காணவில்லையாயின் மீண்டும் என் மீது பாயத் தொடங்கிவிடும்.

காலையில் அம்மாதான் வழமையாக எழுந்து கதவைத் திறப்பா. நான் என் அறையில் படுத்திருப்பேன். கதவை அம்மா திறந்ததும்தான், நேரே ஒரே ஓட்டமாக என் கட்டிலுக்கு வந்து, ஒரே பாய்ச்சலில் என் மீது ஏறி, தன் முதுகை என்மீது வைத்து புரளும், இருபக்கமும் புரளும், சில நாட்கள் நான் நித்திரையில் திடுக்கிட்டு விழிப்பேன். அம்மாவுக்கு மட்டும் பயப்படும் , அம்மாக்கு தெரியும் நேரே என் அறைக்குத்தான் வந்திருப்பார் என்று, அம்மா, "டேய் வெளியே வாடா" என்பா, உடனே ஓடிப்போய் அறைகதவுக் கேட்டினோடு நின்று என்னையும் அம்மாவையும் பார்க்கும். அம்மா போனால் மீண்டும் ஓடிவந்து புரளும். நான் எழுந்து வெளியே போகும்வரை இது நடக்கும்.

எங்கள் வீட்டுக் கோழிகளை அவருக்கு அடையாளம் தெரியும். கோழிகள் அவர்மீது ஏறி உளக்கிக்கொண்டும் போகும், காணாதவர்போல் படுத்திருப்பார். ஆனால் தப்பித்தவறியும் அடுத்த வீட்டுக் கோழி வளவுக்குள் வந்திடக்கூடாது, பாய்ந்து கலைக்கும், சிலவேளை கோழிகள் மேலே எழும்பிப் பறக்கும். இதனால் பக்கத்து வீட்டுக்காரரும் நினைத்திருக்கலாம், நாம்தான் கலைக்கிறோம் என்று. ஆனால் எமக்கே தெரியாவிட்டாலும் நாய்ப்பிள்ளைக்கு அடையாளம் தெரிந்துவிடும்.

நான் காலையில் எழுந்து ரீ குடித்த பின்னரே அவரைக் கட்டுவேன். நான் ரீ குடிக்கும்போது, என்னைப்பர்த்து வாலாட்டும், கொடுக்காவிட்டால் ஊ..... ஊ.... என்று கேட்கும், அதன்பின்னர் அவரது டிஷ்ஸிலும் கொஞ்சம் ஊத்துவேன் குடிப்பார். ஆனால் எனக்கு இப்ப நினைக்க கவலையாக இருக்கு, நான் குடிக்கும்போது அவருக்கும் ஆத்திக் கொடுத்திருக்கலாம், அந்நேரம் எனக்கு கிட்னி:) வேலை செய்யவில்லை. இப்பத்தான் கவலைப்படுகிறேன். பால் காய்ச்சிக் கொடுப்போம், ஆனால் நான் குடிக்கும்போது கொடுக்க நினைப்பதில்லை. அவர் கேட்டால் மட்டுமே கொடுப்பேன். அவரும் தினமும் கேட்பார்:).

நாங்கள் சைவமான நாட்களில் அவருக்காக, எலும்பு/ கருவாடு வாங்கி புறிம்பாக சமைத்துக் கொடுப்போம். சைவம் அவருக்குப் பிடிப்பதில்லை. தினமும் இரவில் அவரது தட்டிலே சாப்பாட்டை வைத்து, ஆளை அவிட்டு விடுவோம். சாப்பிட்டு விட்டு போவார். கொஞ்ச நாளாகப் பார்த்தோம், முக்கால்வாசிச் சாப்பாடு மட்டுமே சாப்பிடுவார், கால்வாசி பிளேட்டில்
இருக்கும். கொஞ்சம் தள்ளிப்போய் படுத்திருப்பார். சாப்பாட்டை யாரும் எடுத்துவிடாதபடி காவல் காப்பதுபோல். நாங்கள் பிளேட்டுக்கு கிட்டப் போனால் ஓடிவந்து மிகுதியையும் சாப்பிடுவதுபோல் பாவனை செய்வார், ஆனால் சாப்பிட மாட்டார். கொஞ்ச நேரம் பொறுத்து மீண்டும் போனால் சாப்பாடு முடிந்திருக்கும். இது என்ன மர்மம் எனக் கண்டு பிடிக்க வேண்டும் என்று, ஒருநாள் சாப்பாட்டை வைத்துவிட்டு ஒளித்திருந்து பார்த்தோம்.

வழமைபோல் இவர் முக்கால் வாசியைச் சாப்பிட்டார், கால்வாசியை மிச்சம் வைத்துவிட்டு போய்த் தள்ளிப் படுத்திருந்தார். கொஞ்ச நேரத்தில் மற்ற மரத்துக்கு கீழே ஒரு சத்தம் கேட்டது, யாரோ நடப்பதுபோல், உடனே இவர் ஓடிச் சென்றார், ( அது அடுத்த வீட்டுப் பொம்பிளை:), இவரது காதலி:)), முகத்தோடு முகம் வைத்து கதைப்பதுபோல் பாவனை செய்தார், உடனே அவ இவரோடு வந்தா, பிளேட்டுக்கு கிட்ட கூட்டிவந்துவிட்டார், அவ சாப்பிட்டா, இவர் பார்த்துக்கொண்டிருந்தார், சாப்பாடு முடிந்ததும் இருவரும் ஓடி ஓடி விளையாடியபடி போனார்கள்.

இதைப் பார்த்து எங்களுக்கு நம்பவே முடியாமல் போய் விட்டது. ஒரு நாய், இப்படி மனிதர்கள் போல நடந்துகொள்கிறதே என்று. அவரை பப்பி என்பதைவிட ஒரு தம்பி என்று சொல்லலாம். அந்தளவிற்கு அறிவு இருந்தது. சனிக்கிழமைகளில் தவறாமல், சம்போ போட்டுக் குளிக்க வார்த்து துடைத்துவிடுவேன். கறுப்பு உடம்பு பளபளவென்று மின்னும். குளிக்க வாடா என்றால், உடனே வந்து குளிக்கும் இடத்தில் நிற்பார். இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம். அதுதான் கடைசியாக நாங்கள் வளர்த்த பப்பி. அதன் பின்னர் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை வளர்க்க. இதோடு சேர்த்து பூனையும் வளர்த்தோம், அதன் கதையையும் சொல்லி, இவரது முடிவையும் அதில் சொல்கிறேன். அந்த பப்பியாரை, நாங்கள் வளர்த்தது கிட்டத்தட்ட 3 வருடங்களே, பின்னர் கைவிட்டோம். இப்போ நினைக்க மிகவும் கவலையாக இருக்கு. பூஸாரின் கதையோடு, நாயாரை ஏன் கைவிட வேண்டி வந்தது என்பதனைப் பின்பு சொல்கிறேன்.

ஊசி இணைப்பு:
எப்பூடிப் பிடிக்கலாம்?:)..

YYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYY

__________________________()________________________

101 comments :

  1. உங்களுக்கேற்ற பொன்மொழிகளையும் கொடுத்திருக்கிறீர்கள்.

    'உருப்படமா போயிருப்பேன்' - உருப்படாமப் போயிருப்பேன். அதாவது நீங்க செலெக்ட் பண்ணுவதும், ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருப்பதாக செலெக்ட் செய்கிறீர்கள். வாழ்க.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..
      ///அதாவது நீங்க செலெக்ட் பண்ணுவதும், ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருப்பதாக செலெக்ட் செய்கிறீர்கள்//

      ஹா ஹா ஹா கர்ர்ர்:) அதாவது ஒரு பழமொயி:) இருக்குதெல்லோ:).. “வந்ததும் அது, சிவன் தந்ததும் அது” என:)..

      Delete
    2. அது தானா அமையும் நெல்லைத்தமிழன்

      Delete
    3. //AngelinThursday, November 16, 2017 10:04:00 am
      அது தானா அமையும் நெல்லைத்தமிழன்//

      ஆமா ஆமா.. நல்லவர்கள் எதையும் தேடிப் போகத் தேவையில்லை:) அதுவே வந்து சேர்ந்திடும்:)...

      ஊசிக்குறிப்பு:
      இங்கே நல்லவர்கள் எனக் குறிப்பிட்டது.. அது என்னைச் சொன்னேன்:) ஹையோ இதையும் நானே ஜொள்ளவைக்கிறியே வைரவா:))... ஓகே ஓகே கூல்ல்:). ஹா ஹா ஹா.

      Delete
  2. Replies
    1. பப்பி ரொம்பவே விபரம்தான் போலயே.....
      எங்கள் வீட்டில் இவர்களை எல்லாம் வளர்த்தது இல்லை அதற்கு பதிலாக என்னை வளர்த்தார்கள்.

      Delete
    2. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

      //அதற்கு பதிலாக என்னை வளர்த்தார்கள்.
      //
      ஹா ஹா ஹா என்ன இது இறந்த காலத்தில் சொல்லியிருக்கிறீங்க வளர்த்தார்கள் என:) அப்போ இப்போ வளர்ப்பதில்லையா?:) ஹா ஹா ஹா அதிரா ஜோக் ஜொள்ளிட்டேன்ன்ன்ன் எல்லோரும் சிரியுங்கோ:)...

      மிக்க நன்றி கில்லர்ஜி.

      Delete
  3. விழையாடி - விளையாடி
    சம்போ - ஷாம்பூ?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நான் பூ எண்டெல்லாம் சொல்ல மாட்டேன் அது போ வேதான்:).. விளையாடி ஹா ஹா ஹா அது அடிக்கடி என்னோடு வெளாடுதே:)..

      எவ்ளோ ஃபீலிங்ஸ் எல்லாம் திரட்டி ஒரு போஸ்ட் போட்டால்:) சேர்ந்து ஃபீல் பண்ணாமல்.. எங்கின பிழை பிடிக்கலாம் எண்டெல்லோ விளக்கெண்ணெயோடு வந்திருக்கிறார் கர்:).. இப்போ இன்னுமொராள் வருவா பாருங்கோ:) ஹா ஹா ஹா..

      Delete
    2. //எங்கள் ஊர்க் கிணறு மிக மிக ஆளம்//

      Delete
    3. எவ்ளோ ஃபீலிங்ஸ் எல்லாம் திரட்டி - ஏஞ்சலின் இந்த இடுகைல என்ன ஃபீலிங் இருக்கு? எனக்குத் தெரிந்ததெல்லாம், 'நாங்க கஷ்டப்பட்டு உணவு அந்த நாலுகாலுக்கு வைத்தால், அதில் முக்காலைத் தான் தின்றுவிட்டு, தன் காதலிக்காக கால் பகுதியை வைத்திருக்கே' என்ற கோப ஃபீலிங்கா?

      Delete
    4. ஹாஆஹாஆ :) அதானே அந்த பௌ பௌ நியாயமா மியாவ் அதிரா மியாவுக்குத்தானே லன்ச் இல்லைடின்னார் ஷேரிங் செஞ்சிருக்கணும் :) அந்த பீலிங் தானாயிருக்கும் நெல்லைத்தமிழன்

      Delete
    5. ///AngelinThursday, November 16, 2017 10:23:00 am
      //எங்கள் ஊர்க் கிணறு மிக மிக ஆளம்/////

      ஆவ்வ்வ்வ்வ்வ்வ் யூ மீன் .....:) ஆழம்?:) ஹையோ ஹையோ.. இது நமக்குள் இருக்கட்டும்:)

      Delete
    6. ///அதில் முக்காலைத் தான் தின்றுவிட்டு, தன் காதலிக்காக கால் பகுதியை வைத்திருக்கே' என்ற கோப ஃபீலிங்கா?//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) யாருக்கும் என் போஸ்ட் பார்த்துப் ஃபீலிங்ஸ் ஏ வரமாட்டுதாமே.. இருங்கோ அடுத்த போஸ்ட்ல வரப்பண்ணிடுவேன்.. ஹா ஹ ஹா:)..

      Delete
    7. ///அதானே அந்த பௌ பௌ நியாயமா மியாவ் அதிரா மியாவுக்குத்தானே லன்ச் இல்லைடின்னார் ஷேரிங் செஞ்சிருக்கணும் :)///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உலகம் போகிற போக்கில தப்பா நினைச்சிடப்போறாங்க :) அஞ்சூ நாளைக்கு காலை தேம்ஸ் கரைக்கு வாங்கோ:).

      Delete
  4. அது அடுத்த வீட்டுப் பொம்பிளை:), இவரது காதலி: - உங்க படத்தைப் பார்த்தா, உங்க வீட்டு நாய், பக்கத்து வளைவு பூனையோடா சொந்தம் கொண்டாடிக்கொண்டிருந்தது?

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) படத்தில் இருப்பது “மகோதரங்கள்”:) ஹா ஹா ஹா .. பக்கத்து வீட்டுக் காதலி, அவ பகலில் வரமாட்டா.. இரவில் மட்டுமே வந்து இவரின் மிச்சத்தைச் சாப்பிட்டு, ஓடி ஓடி விளையாட்டு நடக்கும்....

      மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.. அடுத்து என் பூஸ் கதைக்கு வந்து நிறையவே ஃபீல் பண்ணோனும் ஜொள்ளிட்டேன்ன்:)..

      Delete
  5. எல்லா ஜீவன்களிடத்தும் அன்பு காட்டுவது அருமை..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ..

      இன்று துரை அண்ணனுக்கு மூட் சரியில்லைப்போலும்... :) சிரிக்காமல் வந்து போயிருக்கிறார்:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி துரை அண்ணன்.

      Delete
  6. நாய்க்குட்டியை வளர்த்த கதை மிகவும் சுவாரஸ்யம்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மனோ அக்கா வாங்கோ.. இதுவரை சுவாரஸ்யம்தான்.. முடிவுதான்:(... சரி இப்போ எதுக்கு.

      மிக்க நன்றி மனோ அக்கா.

      Delete
  7. பக்கத்து வீட்டில் ஈஸியா போயி கதைக்க இப்படி ஒருவழி ஹா ஹா நாய்குட்டிக்கு தெரிந்துவிட்டது நம்மை போல் ஒரு வாலு இருக்கும் வீட்டிற்குத்தான் தாம் வந்துள்ளோம் என்று ஐ! ஜாலி ..என்று நினைத்திருக்கும்..... ஹா ஹா இன்டெர்வல் சூப்பர் உங்க வைரவர் பற்றி அவர் காதலிவரை விவரமாய் பகிர்ந்தாச்சு சிரித்தேன் ரசித்தேன் அதிரா இப்படித்தான் அப்போதெல்லாம் வீடுகள் காம்போண்டுகள் கட்டப்படாமல் ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாய் இருக்கும் அந்த காலெல்லாம் போயி போய்விட்டது நானும் அனுபவித்து இருக்கிறேன் இது போல்....... இப்போது எங்கள் வீட்டில் ஒரு பைரவர் இருக்கார் அப்பா அவர் செய்யயும் அடடாகாசங்களை சொல்லி மாளாது
    ஊசி இணைப்பும் அருமை கைவிட்டு எடுக்க சொல்லித்தாங்கோ பூஸாருக்கு
    எப்போவும் டச் பண்ணாமல் போவதில்லை
    என்னடா அதிசயம் அஞ்சுவை காணவில்லை

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பூவிழி வாங்கோ..

      என்னைக் கண்டால் பூஸ் பப்பி எல்லாம் தானா வந்து ஒட்டிடுது:) மனிசர்தான் ஓடி ஒளிக்கினம் ஹா ஹா ஹா:)..

      //இன்டெர்வல் சூப்பர்//
      அது, அவர் என் கிரேட் குரு:).. எப்பவும் தப்பாகத் திங் பண்ண மாட்டார்:)..

      உண்மையேதான், இப்போ பக்கத்து வீட்டுக்கும் ரோட் சுத்தித்தான் போகவேண்டியிருக்கு என அம்மா ஊர் போய் வந்து சொன்னா.. எல்லாம் மலை ஏறிவிட்டது..

      எங்கள் ஊர்க் கிணறு மிக மிக ஆளம்.[ஒரு பனை அளவு ஆளம் வரும்]. ஆனால் தண்ணியோ பளிங்குபோல பளபளக்கும், எட்டிப் பார்த்தால் அடியே இருக்கும் கற்கள் கூடத் தெரியும், தோடு விழுந்திட்டால்கூடக் கண்டு பிடிப்போம்.

      ஆளம் அதிகம் என்பதனால் 4,5 வீடுகளுக்கு பொதுவாக நடுவில் ஒரு கிணறு இருக்கும்... கிணற்றடியில்தான் பெண்களில் கூத்தும் கும்மாளமும் நடக்கும்.. நாம் ஊருக்குப் போனால் கிணற்றடியிலேயே விசாரிப்புக்கள் தொடரும்... [இதனைக் கொஞ்சக் காலம் அனுபவிச்சிருப்பேன் நான்] பின்னர் கிணறு வெறிச்சோடிக்கிடக்கு.. வீட்டுக்கு வீடு அட்டாச் பாத்ரூம், குழாக்கிணறு.. இப்படியாகி விட்டது..

      //எப்போவும் டச் பண்ணாமல் போவதில்லை //
      நன்றி.. தெரியும் தமனாக்கா சொன்னா:)..

      //என்னடா அதிசயம் அஞ்சுவை காணவில்லை///
      ஹா ஹா ஹா அதிசயம் ஆனால் உண்மை:).. எங்காவது ஹீல்ஸ் போட்டு நடந்து தடக்கி விழுந்து.. பெட் ரெஸ்ட்ல இருப்பா:).. வந்திடுவா:) இல்லை எனில் ஒரேஞ் வாங்கிக்கொண்டு பார்கப்போகோணும்:)...

      ஹா ஹா ஹா மிக்க நன்றி பூவிழி.

      Delete
    2. எந்த க்ரையிங் பேபி படத்தை போட்டாலும் பெரிசா இடத்தை பிடிக்குது .நானா டிலீட்டிட்டேன்

      Delete
    3. [im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRRfINwJjV3NUXmlHzLKVHMITa7DRtCx2GdJsOPn3B4NHe5_nDe[/im]

      Delete
    4. பூவிழி இமேஜ் போட்டேன் அதுவே இடத்தையெல்லாம் occupy செஞ்சி :)

      Delete
    5. ஹா ஹா ஹா அஞ்சூஊ அழாதீங்க.. நான் வேணுமெண்டால்ல் “மூவ்” பூசி விடட்டா?:)..

      படம் லிங் கொப்பி பண்ணும்போது, வலது பக்கம் பாருங்கோ சைஸ் இருக்கும்.. அதில் 500 க்குள் வரும் அளவாக இருந்தால் இங்கு ஓகேயாக இருக்கும்.

      Delete
  8. இந்தப்பதிவு எங்கள் செல்லியின் நினைக் கொண்டு வருகிறதுசெல்லி எங்கள் செல்லம்படித்தீர்களா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ...

      உங்களோடு காரில் கொண்டு ஊர் சுத்தியதாக எழுதியதைப் படிச்சேன்.

      மிக்க நன்றி.

      Delete
    2. நினைவடுக்குகளில்ருந்து ஒரு பயணம் பதிவில் செல்லி பற்றிக் குறிப்பிட்டிருந்தேன் பதிவில் செல்லி பற்றிய சுட்டியுமிருந்ததே அது பற்றின சுட்டீதோ http://gmbat1649.blogspot.com/2011/06/blog-post_15.html

      Delete
    3. மீள் வருகைக்கு மிக்க நன்றி ஐயா.. சென்று படிச்சு கொமெண்ட் போடுகிறேன் பின்பு.

      Delete
  9. //சின்னப் பிள்ளைகள் ( நாய் பூனை) எல்லாம் போய் வரலாம். பெரியவர்கள் இருந்து/ குனிந்து போக வேண்டும். //
    எதுக்கு இவ்ளோ பில்டப் நீங்க போய்வரன்னு சொன்னாலே அது பூனை வழின்னு புரிஞ்சிடுமே எல்லாருக்கும் ஹாஹாஆ

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ..

      அடிகிடி ஏதும் படல்லியே:)... நான் அவதிப்பட்டு திருப்பதிக்கு அஞ்சுவைக் கூட்டி வந்து மொட்டைபோடப்பண்ணுவேன்ன்.. காப்பாத்திப்போடப்பா என நேர்ந்திட்டனே:) இப்போ என்ன பண்ணுவேன்?:)..

      ///எதுக்கு இவ்ளோ பில்டப் நீங்க போய்வரன்னு சொன்னாலே அது பூனை வழின்னு புரிஞ்சிடுமே எல்லாருக்கும் ஹாஹாஆ///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

      Delete
  10. உங்க பக்கத்து வீட்டு புது மாப்பிள்ளைக்கு செம ஆப்பு :) மத்தவங்கள விரட்ட நினைச்சார் கடைசீல பைரவர் அவரையே நெருங்க விடலா :)
    இதிலிருந்து என்ன தெரியுது :) அன்பாயிருந்தா உள்ளங்களை கொள்ளை கொள்ளலாம் :)

    ஊரில் எங்க வீட்டுக்கும் பின் வீட்டுக்கும் அப்படி ஒரு trellis அமைப்பு இருந்தது நினைவிலிருக்கு .இப்போ எங்கே கொஞ்சூடு இடமிருந்தாலும் அதிலும் கான்க்ரீட் போட்டுறாங்க :(

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ..

      இதத்தான் பட்டினத்தார் சொன்னார்.. தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும் என:) ஹா ஹா ஹா:).. அப்போதைய அந்த அமைப்பு இப்போ இல்லை அஞ்சு... எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு ஆச்சி இருந்தா, அவவிடம் பின்னேரம் 4,5 மணிபோல போவோம், அவ கற்கண்டு போத்தலில் வச்சிருப்பா.. எமக்கு எடுத்து கைக்குள் தருவா.. வாங்கிக் கொண்டு வருவோம்...

      இதெல்லாம் எவ்வ்வளவு இனிமையான காலங்கள்.

      Delete
  11. தாஸேட்டன் பாட்டில் ரொம்ப பிடிச்சது தெய்வம் தந்த வீடு ,கண்ணேகலைமானே ,பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவினில் ,
    மனைவி அமைவதெல்லாம் ,உறவுகள் தொடர்கதை ஆராரிரோ பாடியதாரோ இந்த ஆராரிரோ தேம்பி அழுகை வரும்

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவினில் தொட்டிலைக் கட்டிவைத்தேன் - இது பெண் குரல் பாடல்ல்லவா? அ.அ.வுக்கு எங்க இதெல்லாம் தெரியும்னு அடிச்சு விட்டீங்களா இல்லை அவங்களை செக் பண்ணறீங்களா?

      Delete
    2. ///ரொம்ப பிடிச்சது தெய்வம் தந்த வீடு ,கண்ணேகலைமானே ,பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவினில் ,
      மனைவி அமைவதெல்லாம் ,உறவுகள் தொடர்கதை ஆராரிரோ பாடியதாரோ///

      ஆவ்வ்வ்வ்வ் அவரா நீங்க?:) நான் என்னைப்போல நீங்களும் ஜூத்தூஊஊஊ ஹையோ அது யுத் ஆக்கும் என நினைச்சுட்டிருந்தேன்:).. நான் எல்லாம் 2000 க்குப் பின்பு வந்த பாடல்கள் மட்டுமே எப்பவும் கேட்பேனாக்கும்.. ஏனெண்டால் மீ சுவீட் 16 எல்லோ இப்போ நடக்குது:).. ஹா ஹா ஹா இப்போ ஒராளுக்கு ஹெட் சுத்துமே:))

      Delete
    3. ஹா ஹா ஹா ஆவ்வ்வ்வ்வ் நான் கவனிச்சிருக்கவே மாட்டேன் இதை:).. நெல்லைத்தமிழன் கரீட்டாக்க்க்க் கழுத்தில கத்தி வச்சிட்டார்ர் அஞ்சுக்கு:).. ஹா ஹா ஹா:)).. அவ பாட்டே கேட்பதில்லை நெல்லைத்தமிழன்.. ச்சும்மா ஏதோ முந்தின நினைவில அவிட்டு விட்டிருக்கிறா:) ஹையோ ஹையோ:)..

      Delete
    4. https://www.youtube.com/watch?v=io-w75RCh_Y
      உங்க ரெண்டுபேருக்கும் பனிஷ்மென்ட் :)
      நெல்லைத்தமிழன் அந்த குழை சாதத்தை செஞ்சி சாப்பிட்டே ஆகணும்
      அதிரா :) உங்களுக்கு நான் என்ன செய்வேன்னு தெரியும் ..அதேதான்

      எம் ஜி ஆர் அங்கிள் என்னமா உருகி பாடுவார் :)
      லிங்கை பாருங்க

      Delete
    5. எங்கம்மா தீவிர தாஸேட்டன் ரசிகை அவங்களுக்காக நாங்க கடைல எழுதி கொடுத்து ரெக்கார்ட் செய்வோம் :)

      Delete
    6. ///உங்க ரெண்டுபேருக்கும் பனிஷ்மென்ட் :)
      நெல்லைத்தமிழன் அந்த குழை சாதத்தை செஞ்சி சாப்பிட்டே ஆகணும்
      அதிரா :) உங்களுக்கு நான் என்ன செய்வேன்னு தெரியும் ..அதேதான் ///

      ஆஆவ்வ்வ்வ்வ் இதென்ன இது புயு வம்ல மாட்டிட்டனோ?:).. ஹையோ நெல்லைத்தமிழனுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்குமே என அவரை நெம்பியெல்லோ ஒத்தூதிட்டேன்ன்ன்ன்:)).. ஹா ஹா ஹா அப்பவும் கொஞ்சம் டவுட் வந்துது, காதில ஆண்குரலில் பாட்டுக் கேட்டதுபோல இருக்கே.. ஒருக்கால் தேடிப் பார்ப்பமோ என நினைச்சேன்ன்.. புத்தி அப்படிச் சொன்னாலும்:), மனம் மிரட்டியது... சே சே நெல்லைத்தமிழன் சொன்னாக் கரெக்ட்டாத்தான் இருக்குமென:).. அது இருகுரலிலும் வருதுபோல... தீபாவளிப் பாடல் போல.. உன்னைக் கண்டு நான் வாட.. என்னைக்கண்டு நீ வாட.. கண்ணீரும் கதை சொல்லும்.. தீபாவளி...

      அதனால என்னில டப்பு இல்லை:) பட் நெ.தமிழன் குழை ஜாதம்:) செய்து சாப்பிட்டே ஆகோணும் ஜொள்ளிட்டேன்ன்ன்ன்:).

      Delete
    7. ஆனா அப்பாடலைப் பாடியவர் எம் ஜி ஆர் அங்கிளாக்கும்:) என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊஊஉ:) ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:)...

      Delete
  12. எங்க அம்மா கூட pets பேர்ட்ஸ் எல்லாரையும் வாடா போடா னு தான சொல்வாங்க :)
    உங்க போஸ்ட் பல நினைவுகளை கிளறிவிட்டது எனக்கு .

    அந்த பக்கத்துக்கு வீட்டு தோழிக்கு சாப்பாடு மிச்சம் வச்சாரே உங்க வீட்டு பையன் அது நாலுகாக்ளாஸுக்கும் அன்புண்டு காதல் பாசமுண்டு என்பதற்கு சிறந்த உதாரணம் ..
    ஒரு நாலுகால் எங்க உறவினர் வீட்ல வளர்த்தது அவர் வேறு ஒருத்தர்கிட்ட கொடுத்தார் அது வாராவாரம் எங்க வீட்டுக்கு வரும் அப்படி ஒருமுறை வரும்போது தனது தோழியையும் கூட்டி வந்தான் :)
    எங்க வீட்ல கினி கோழிக்கும் சண்டை சேவலுக்கும் கூட லவ் இருந்துச்சே :)

    இப்போ பிரபு மல்ட்டி அப்படிதான் :)

    ReplyDelete
    Replies
    1. நாய்ப் பிள்ளைகளில் பல விசயம் கேள்விப்பட்டிருக்கிறேன் அஞ்சு, ஆனா இப்படி சாப்பாட்டில் மிச்சம் வைத்து லவ்வருக்கு கொடுப்பதென்பது, நேரில் பார்த்த எனக்கே பெரிய ஆச்சரியம்.

      நான் எங்கட டெய்சியையும்.. டெய்சான் எங்க போட்டான்ன்ன்?.. வந்திட்டானோ இப்படித்தான் கூப்பிடுவேன். ஓடி வருவா:)..

      Delete
    2. நாய் காக்கைகளுக்கு மிச்சம் வைத்துப் பார்த்திருக்கிறேன். அதை எங்கள் பதிவொன்றிலோ, ஃபேஸ்புக்கிலோ பகிர்த்திருக்கிறேன். நாய் போட்ட குட்டிகளுடன் காக்கைகள் சீண்டி விளையாடும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பெரிய நாயின் முதுகில் உரசியபடியே கத்திக்கோண்டே இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் க்ராஸ் பண்ணும். நாய் அவற்றின் மேல் கோபப்படாது சற்று மிச்சம் வைத்து விலகி விடும்.

      அதேபோல ஒரு பரஸ்பர புரிதலில் காக்கைகளும் அணில்களும் கூட உணவைப் பகிர்ந்து உண்பதையும் எங்கள் வீட்டுக்கருகில் பலமுறைப் பார்த்திருக்கிறேன்.

      Delete
    3. ஓ நான் இப்படிக் கண்டதில்லை... ஒன்றை ஒன்று கொத்தி விரட்டி விட்டுச் சாப்பிடுவதை அல்லது, கிடைக்கும் சைக்கிள் ஹப்ல் இல் ஓடி வந்து களவா கொத்திக்கொண்டு ஓடுவதைத் தான் பார்த்திருக்கிறேன்.

      இது அவ அருகில் இருந்தால்கூட பறவாயில்லை, வருவா என நினைச்சு மிச்சம் வச்சுக் காத்திருப்பார்ர்ர்... மனிசரை விட மேலே :)... மிக்க நன்றி மீள் வருகைக்கு.

      Delete
  13. /எங்காவது ஹீல்ஸ் போட்டு நடந்து தடக்கி விழுந்து.. பெட் ரெஸ்ட்ல இருப்பா:).. வந்திடுவா:) இல்லை எனில் ஒரேஞ் வாங்கிக்கொண்டு பார்கப்போகோணும்:)...//

    எனக்கு mosambi fruit தான் வேணும் ஒரேஞ் வேணாம் அப்படியே அரைக்கிலோ ஒரிஜினல் நேந்திரம் சிப்ஸும் கொண்டாங்க மியாவ்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா இது புது முறையா இருக்கே ஜாமீ.. கேட்டு வாங்குவது கர்ர்:).. உங்களுக்கு பொயில்ட் எக் தான் நல்லதாம் அதனால டைனோசர் எக்.. அதாவது பெரீய எக்க் வாங்கி வாறேன்ன் அவிச்சுச் சாப்பிட்டால் விரைவில குணமாகிடும்:)

      Delete
  14. /அவ்வ் அப்போ பேஸ்புக் வாட்சப்பில இல்லாதவங்க மங்கியார்கள்னு சொல்றீங்களா :)))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா... ஸ்ஸ்ஸ்ஸ் மங்கி எண்டெல்லாம் ஜொள்ளக்கூடா அஞ்சு:).. அவர் என் கிரேட் குரு:)..

      Delete
  15. ஆவ்வ் பிளாக் கேட் முறைக்குது மீ ரன்னிங் :)

    ஆமாம் தூங்கிடாதீங்க யூகேவில் இந்த ஆட்டம்க்கு இது autumn :) 150 மில்லியன் ஸ்பைடர்ஸ் தோட்டத்தில் இருந்து வீட்டுக்கு படையெடுக்கும்னு சொல்றாங்க பிக்காஸ் of A downturn in weather

    ReplyDelete
    Replies
    1. ///
      autumn = ஆட்டம்... ஓ மை கடவுளே .. வட் எ டமில்ல் வட் எ டமில்ல்ல்:) ஹா ஹா ஹா:).

      ஒரு குட்டிப் ஸ்பைடர் ரூமில் வந்திட்டாலே... பிள்ளைகள் இருவரும் பெட்டுக்கு மேலே ஏறி நிற்பினம் இதில் 150 மில்லியனோ அவ்வ்வ்வ்வ்:).. ஆனா எங்களிடம் ஓவர் குளிர் அஞ்சு.. பெரிசா பூச்சி ஸ்பைடர் வருவதில்லை..

      Delete
  16. நானும் நாய் வளர்க்கிறேன் என் மனைவிக்கு நாய் என்றாலே பயம் ஆனால் குழந்தைக்காக வாங்கினாள் அந்த நாயால் எனக்கு கிடைத்த நன்மை என்னவென்றால் அது என் மனைவியை அடுத்த பெட் ரூமிற்கு துரத்திவிட்டு என்னோட சேர்ந்து தூங்குக்கிறது அத்னால்தான் எந்தவித தொந்தர்வு இல்லாமல் பதிவு போட முடிகிறது

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ...

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்... நாளைக்கு நாயார்.. உங்களை வீட்டை விட்டே துரத்தாமல் இருந்தால் சரி:)..

      Delete
  17. எனக்கும் எங்க வீட்டு நாயுக்கும் வித்தியசம் என்ன்வென்றால் என் வீட்டம்மா வேலைக்கு சென்று வீட்டிற்கு வந்ததும் என் வீட்டு நாய் வாலை ஆட்டிக் கொண்டு அவளிடம் செல்லும் நான் என் வாலை சுருட்டிக் கொண்டு பவ்யமாக அடங்கி போயிருப்பேன்

    ReplyDelete
    Replies
    1. அப்போ மொத்தத்தில உங்க வீட்டு நாய்ப்பிள்ளைக்கு இருக்கும் மதிப்புக்கூட:)... சரி சரி வாணாம் .. எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:) மீ ரொம்ப நல்ல பொண்ணாக்கும்...

      ஹா ஹா ஹா அதனாலதான் புரொபைல் பிக்சரிலும் கை கட்டி அடக்க ஒடுக்கமாக இருக்கிறீங்க ட்றுத்... இங்கே[வலையுலகில்] மாமி:) இல்லை:) தைரியமா இருங்க பயப்பூடாதீங்க:)...

      ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  18. சமீப காலமாக நல்ல யேசுதாஸ் பாடல்கள் கேட்கிறீர்கள் போல. எனக்கும் பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..
      அது நான் சொன்ன மாமியின் சிடி யில் இருக்கு, காரில் எப்பவும் கேட்கிறேன்.. ஆனா கண்ணதாசன் அங்கிளைப்போல ஜேசு அங்கிளிலும் எனக்கு ரொம்பப் பிர்ர்ர்ர்ர்ர்யம்:)

      Delete
  19. பப்பியும் வளர்த்திருக்கிறீர்கள் என்பது சந்தோஷம் தருகிறது. அதன் விளையாட்டுகளைபற்றிச் சொல்லும்போது நான் வளர்த்த செல்லங்களின் நினைவும் வருகிறது. நாய்க்குட்டியின் அழகு எதற்கு வரும்? அது பழகுவது போல வேறெதுவும் பழகாது. அதை ஏன் கைவிட்டீர்கள் என்று அறிய ஆவலாகக் காத்திருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. பப்பி அளவுக்கு பூஸாரைப் பழக்க முடியாதுதான்.. ஆனாலும் நான் வளர்க்கும் பூஸ்களின் கதை கேட்டால் நம்ப மாட்டீங்க.. இப்போ எங்கட டெய்சி கூட, என்னோடு பேசுவா... வெளியே போய் வீட்டுக்குள் வர லேட்டாகிட்டால்.. நான் அதட்டுவேன் இவ்ளோ நேரமும் எங்கே போயிருந்தீங்க.. அடிப்பேன் இண்டைக்கு.. நோ ஃபூட் .நோ ட்ரீட்... இப்பூடி மாறி மாறிச் சொன்னால்.. உடனே பொத்தென நிலத்தில விழுந்து 4 கால்களையும் மேலே தூக்குவா... மீக் மீயாவ்வ்வ் என சவுண்ட் கொடுப்பா என்னெண்டால் மன்னிக்கட்டாம் என.. இது டெய்லி வீட்டில் நடக்கும் ஒரு சம்பவம்.. நேரே பார்க்கும்போது யாராலும் நம்ப முடியாது.. இப்படி இன்னும் இருக்கு. அடுத்த கதை விரைவில் தொடரும்.

      Delete
    2. ஆச்சர்யம். நாய்கள் இப்படி ஃபீல் பண்ணுவது, மன்னிப்பு கேட்பது யூ ட்யூப் வீடியோக்களில் பார்த்திலுக்கிறேன். பூனையுமா? இது மாதிரி அவை செய்யும் அறிவார்ந்த சுவாரசியமான விஷயங்களை வீடியோ எடுத்துப் போடுங்களேன்.

      Delete
    3. வீடியோ நிறைய எடுத்தோம் ஸ்ரீராம், ஆனா பிரட்டனை என்னெண்டால் நானுமெல்லோ அவவோடு உருண்டு பிரண்டு சத்தம் எல்லாம் போடுவேன்:) அதை எப்பூடி பபுளிக்குல?:) ஹா ஹா ஹா...

      Delete
  20. இடைவேளைப் படம் சிரிப்பு. ஊசி இணைப்புப் படம் சிறப்பு.






































    ReplyDelete
    Replies
    1. ஹையோ என்னாச்சு.. எங்கோ பார்த்தபடி எண்டர்ர்ர்ர்ர் தட்டிப்போட்டுப் பப்ளிஸ் பட்டினில் கை வச்சிருக்கிறீங்க போல ஹா ஹா ஹா:).

      Delete
    2. ஹி.... ஹி... ஹி.... இது வேற மாதிரி மிஸ்டேக்!

      Delete
  21. ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் பக்கப் பாதை வழியாக சென்று வரும் வசதி சுவாரஸ்யமான தகவல்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான், இப்போ இப்படி இல்லை என்றே நினைக்கிறேன், பிள்ளைகளும் முன்புபோல பக்கத்து வீட்டுக்கெல்லாம் போய் ஓடிப்பிடிச்செல்லாம் விளையாடுவதில்லை... ..

      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
  22. அருமையான நினைவுகள் அதிரா.
    நாம் வளர்த்த செல்லத்தைப்பற்றி சொல்வது என்றால் விஷயங்கள் வந்து கொண்டே இருக்கே! நாய் உங்களிடம் வந்த கதை அருமை.
    நாய்கள் மனிதர்களை நேசிக்கும், பூனை வீட்டை நேசிக்கும் என்பார்கள்.
    நமக்கு யார் நண்பர்களோ நம் பிரிய செல்லத்திற்கும் நண்பர்கள்.


    ஊசி இணைப்பு அருமை.
    அடுத்த பதிவை படிக்க ஆவல்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

      உண்மைதான் சொல்லி முடியாது அவர்களின் கதைகள். அடுத்து பூஸார் வந்த விதம் படிச்சுச் சிரிப்பீங்கள்.. ஹா ஹா ஹா...

      மிக்க நன்றி கோமதி அக்கா.

      Delete
  23. யேசுதாஸ் பாடல் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி... அதேதான் என்னிடம் இருக்கும் சிடி யில் கேட்டேன், எனக்கும் நன்கு பிடிச்சுப்போச்சு... யூ ரியூப்பில் இருக்காதாக்கும் என நினைச்சே தேடினேன் இருந்துது...

      Delete
  24. அதிரா இன்றைய என் பதிவில் நீங்கள் கண்டு பிடித்த உண்மை இருக்கிறது படித்து பார்க்க வாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் லேட்டாகிட்டுது கோமதி அக்கா.. உடன் வருகை தர முடியாமல் போனமைக்கு மன்னிக்கவும். தகவலுக்கு நன்றி.

      Delete
  25. அருமை
    எங்கள் வீட்டிலும் ஒரு பப்பி இருக்கிறது
    தங்களின் பதிவினை ரசித்தேன்
    நனறி சகோதரியாரே
    தம+1

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ.. இருக்கும்போது அதன் அருமை பெரிசாகத் தெரிவதில்லை... இலை என்றபின் அதிகம் அவர்கள் பற்றி யோசிப்போம்.. மிஸ் பண்ணுவோம்ம்.. இது மனித இயல்பாகி விட்டது...

      மிக்க மிக்க நன்றிகள்.

      Delete
  26. நன்றி கெட்ட மனிதரிலும் நாய்கள் மேலடா!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ புலவர் ஐயா வாங்கோ..

      ஹா ஹா ஹா உண்மைதான், மனிதரில் நன்றி உள்ளவர்களும் உண்டு, நன்றி காட்டாதவர்களும் உண்டு, ஆனா நாய் எண்டாலே நன்றி இருக்கும் அனைத்துக்கும்... மிக்க நன்றிகள்.

      Delete
  27. எங்கள் ஊரான நெய்வேலியில் இப்படி பக்கத்து வீட்டுக்குச் சென்று வர, தோட்டத்து வழி வைத்திருந்தோம். இனிய நினைவுகள்....

    பப்பி - நாங்கள் வளர்த்ததில்லை. அப்பாவுக்கு ஆசை இருந்தாலும் வளர்க்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ...
      வீட்டில் வளர்க்க வசதி இருப்பின் வளர்த்துப் பார்க்கலாம், இரு எஸ்ட்றா நபர் வீட்டில் இருப்பதைப்போன்ற ஃபீலிங் வரும்.
      மிக்க நன்றி.

      Delete
  28. [im]https://i.pinimg.com/236x/a2/81/4c/a2814ccef603817c6d5c82ef19cda9dc--pink-petals-pink-flowers.jpg/im]

    _()_ அனைவருக்கும் நன்றி.. மொய் வைக்காமல் மை வச்சோருக்கும் நன்றி.. அறிவுப்பசிஜி நன்றி.

    ReplyDelete
  29. பொட்டுக்காக சண்டை போட்டு வழக்கு பேசியவர்கள் நினைவுகள் வந்து போகின்றது அதிரா!)))நன்றியுள்ள மிருகம் வைரவர் ஆனால் இங்கே வளர்க்க ஆர்வம் இல்லை)))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் வாங்கோ...
      உண்மைதான் இதைப் படிப்போருக்கு ஊர் நினைவுகள் வந்து போகும்...
      இங்கு வளர்க்க விருப்பமிருந்தாலும் வளர்ப்பது கொஞ்சம் கஸ்டம்தான் நேசன்...

      Delete
  30. இப்போது எங்கே பொட்டு இருக்கும்? கால நதியில் மறந்து போயிருப்பார்கள் என நினைக்கின்றேன் . இனி இலங்கை போகும் போது கேட்டு ஒரு பதிவு போடுங்க அதிரா!)))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ... போனால்:) பெரீஈஈய போஸ்ட் போடுவேன்.. வந்திடுங்கோ நேசன்...
      மிக்க நன்றி. பயணம் இனிதே அமைய பிரார்த்தனைகள்.

      Delete
  31. அச்சோ அந்த பக்கத்து வீட்டு அங்கிள் ....பாவம்.... சோ sad


    ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது அதிரா....

    அதிலும் அம்மாவுக்கு பயப்படும் இடம் சூப்பர்....


    .....எங்க அம்மாவுக்கு தான் இந்த அனுபவம் எல்லாம் உண்டு...அவங்க தான் சின்ன வயசுல மாடு ...கோழி எல்லாம் வளத்து இருக்காங்க...

    நான் சிறு வயதில் கேட்டதுக்கு...இடம் இல்ல சோ நோன்னு சொல்லிடாங்க...

    இப்போ பையன் கேட்குறான்...ஏற்கனவே இரண்டு செல்ல நாய் இருக்கு ...போதும் ராஜான்னு சொல்லியாச்சு...

    உங்க அனுபவங்களை எல்லாம் படிக்க படிக்க ...

    ஒரே ஆச்சரியம் தான்...!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ, உண்மைதான் ஊர் நினைவுகள் சுவாரஸ்யம் அதிலும் கோழிக்குஞ்சுக்கு முட்டை வைத்து அது முட்டையால் வெளியே வந்து கீச்சுக் கீச்சு என்பதைப் பார்ப்பதில் இருக்கும் சந்தோசமும் சொல்லி முடியாது மிக்க நன்றி அனு.

      Delete
  32. துளசி: எங்கள் வீட்டில் நாய்கள் வைத்திருந்தோம் இப்போதும் ஒரே ஒருவன் இருக்கிறான். இவன் ஒரு க்ராஸ் வகை. முடி நிறைய இருக்கும்...எங்கள் ஊரிலும் வீடுகள் தோட்டங்களுடன் ரொம்பவே தள்ளித் தள்ளி இருக்கும். மலைப்பிரதேசம் என்பதால். சுற்றிலும் ரப்பர் தோட்டம், மா, பலா என்றுதான் இருக்கும். சுற்றிலும் வேலிதான் இருக்கும் எனவே பக்கத்துவழியாக வீடுகளுக்குப் போய்விடலாம். ஷார்ட்கட்!! தாஸேட்டன் பாடல்கள் இனிமை அருமை. எங்கள் ஊர் கோயில்களிலும், மலையாளத்திலும் அவரது குரல் தான் இப்போதும் எங்கும் பெரும்பாலும் ஒலிக்கிறது!
    இன்டெர்வல் ஹாஹாஹாஹாஹாஹா...நானும் குரங்குதான்! முகநூல் கணக்கு இருந்தாலும் போவதே இல்லை. ஊசிக்குறிபும் இணைப்பு ரெண்டும் நன்றாக இருக்கு..

    கீதா: அதிரா லேட்டோ லேட்டு...என் கம்ப்யூட்டர் பிரச்சனையால் அதிக தளம் போக முடியறதில்லை...ஃபர்ஸ்ட் கம் ஃபர்ஸ்ட் செர்வ்ட் என்பது போல் எந்த பதிவுகள் முதலில் கண்ணில் படுதோ அதுக்குப் போயிடறது. பெரும்பாலும் எபி, வெங்கட்ஜி, கில்லர்ஜி பதிவுகள் முதலில் கண்ணில் பட்டுடும். உங்கள் பதிவுகள் எல்லாம் பெட்டிக்கு வரும் போதுதான்..அதுவும் கணினி மூட் இருக்கணும்..
    பாருங்க உங்களுடனும் ஏஞ்சலுடனும் கும்மி அடிக்க முடியலை...

    சரி பதிவுக்கு வரேன்...ஜேசு அண்ணா பாடல்கள் ரொம்ப ரசிப்பேன் தமிழிலும் சரி மலையாளத்திலும் சரி...

    ஆஹா அல்சேஷன் க்ராஸ் பப்பியா!!! அந்த பக்கத்துவீட்டுக்காரருக்குப் பயம் என்பது அதற்குத் தெரிந்திருக்கும் அதான் அவரை டாமினேட் பண்ண நினைத்திருக்கு...இது வைரவர் சைக்காலஜி!!! மட்டுமல்ல மனித சைக்காலஜியும் கூட! நம்மைக் கண்டுப் பயப்படுபவர்களை நாம் அடக்க நினைப்போம் இல்லையா அப்படி...அதான் அது அவரைக் கண்டு மேலும் பயப்பட வைத்திருக்கு. நீங்கள் அவரைக் கண்டு தடவிக் கொடுத்ததும் அதற்கு இவர் அன்பானவர் என்று தெரிந்திருக்கு அதான் உங்களிடம் விளையாட்டு அம்மாவிடம் மரியாதை பயம்...வைரவர்களின் அன்பு அலாதிதான் அதிரா.

    நீங்கள் சொல்லியிருப்பது போல்தான் இப்போது என் கண்ணழகி...மறைந்த ப்ரௌனி ரொம்ப மெச்சுர் வைரவி! கண்ணழகி கொஞ்சம் விளையாட்டுப் பிள்ளை இருவருமே ஒரே வெல்ப்பிங்கில் பிறந்தவர்தான் 8.1/2 வயது...ஆனாலும் கண்ணழகி இப்போதும் ரொம்பத் துரு துரு..

    பெரிதாகிவிட்டது கமென்ட் இதோ அடுத்து வரேன்..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ...
      இம்முறை வரவர் பற்றிய போஸ்ட் என்பதால் சந்தோசத்தில் நிறைய எழுதிட்டீங்க... கேரளா பாலக்காடெல்லாம் ரீவியில்தான் பார்க்கிறேன்... மிக நல்ல அழகிய இடங்கள் பார்த்து அலுக்காது.
      ஓ நீங்களும் முகநூலில் இல்லயோ... எனக்கென்னமோ புளொக்கில் கிடைக்கும் மகிழ்ச்சி அங்கு கிடைத்ததில்லை:).

      மிக்க நன்றி.

      Delete
    2. வாங்கோ கீதா வாங்கோ... என்னமோ தெரியவில்லை கொம்பியூட்டரில் எந்த பிரைள சரை ஓன் பண்ணினாலும் அதில், என் இந்த போஸ்ட் மட்டும் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு கொடுத்த பதிலின் பின்பு எதையுமே காட்டுதில்லை... இன்றுவரை வெயிட் பண்ணினேன் வரவே இல்லை, ஆனா கொமெண்ட்ஸ் எண்ணிக்கை மட்டும் கரெக்ட்டாக் காட்டுது... அதனால இது மொபைல் பதில். மொபைலில் சபாரி புரோசர் என்பதால் பிரச்சனை இல்லை.

      உண்மைதான் கீதா, பூனை நாய், அழும் குழந்தை இவர்கள் மூவரையும் நான் ஈசியா கண்டில் பண்ணிடுவேன்... அது என்னமோ தானா அமைஞ்சுபோச்சு.

      எனக்கு கீதா ஏதும் ஏடாகூடமாக கேட்டாலோ பார்த்தாலோ கனவில் வந்துவிடும். உங்கள் பிரளனி விசயம் கேட்டு மிக வருந்தினேன், நைட் கனவு எங்கள் டெய்சிக்கு என்னமோ ஆச்சு ... நான் தேம்பித் தேம்பி அழுகிறேன்...:(.
      எந்த இழப்பும் கவலையானதே...

      Delete
  33. என்னுடைய மூன்றாவது காது இப்போது மழையில் நனைந்து ரிப்பேர் ஆகி போயிருக்கு அடுத்த வாரம் தான் வரும். அதுவரை கொஞ்சம் கஷ்டம்தான் அவ்வளவாக வெளியில் செல்ல முடியவில்லை. வண்டி சத்தம் எல்லாம் கேட்க்கும் ஆனால் காலிங்க் பெல், பேச்சு எல்லாம் ரொம்ப அருகில் இருந்தால் தான் கேட்கும். எனக்கு இப்போ உதவி கண்ணழ்கிதான் வாசலில் யாராவது வந்து பெல் அடித்தால் உடனே ஓடிப் போய் குரைத்துக் குரல் கொடுப்பாள். நம் வீட்டுக்குத்தான் என்றால் என்னைப் பார்ப்பாள் வாசலைப் பார்ப்பாள்...இப்படி.. மிக மிக உதவியாக இருக்கு. நான் அவளைப் பாராட்டி நன்றி சொன்னதும் அவளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்...அவள் உடல் மொழியில் தெரிந்துவிடும். ஓடுவாள் குதிப்பாள்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கீதா, மூன்று காது இருக்கு எனும் தெகிறியத்தில் ஒன்றை மழையில் நனைய விட்டீங்களோ கர்ர்ர்ர்ர்:)..
      கண்ணழகி நல்ல பெயர்... எங்கள் ஊருக்கு ஒவ்வொரு வருடமும் வந்துபோகும் ஒரு உல்லாசக் கப்பலுக்கு நான் வச்சிருக்கும் பெயர் கண்ணழகி:)

      Delete
  34. பூஸாரும் ஆம் அப்படி மல்லாந்து படுத்து காலைத் தூக்கி அப்புறம் நாம் கோபப்பட்டால் கீழே படுத்து பம்மி மன்னிப்பு போல் எல்லாம் செய்வார்.. பேசுவார்கள்....

    என் மகள்கள் ப்ரௌனியும், கண்ணழகியும் அப்படித்தான். திடீரென்று பேப்பரைக் கிழித்து பீஸ் பீஸாகப் போடுவார்கள். இல்லை என்றால் தலைகாணியைஇழுத்து பஞ்செல்லாம் பிய்த்துப்போடுவார்கள். அவர்களுக்குப் போரடிக்கிறதாம். இல்லை நான் அவர்களைக் கொஞ்சவில்லை என்று.

    அப்புறம் அவர்களைக் கோபித்துக் கொண்டால் அவர்கள் தங்கள் மீது தவறில்லை என்பதை மிக அழகாகக் குரல் எழுப்பி நியாயப்படுத்துவார்கள். அந்தக் குரல் கேட்கணும் ரொம்ப ரசிக்கலாம்....தங்கள் மீது தப்பில்லை என்று....

    நல்ல காலம் மூன்றாவது காது இல்லைனாலும் ஃபோன் பேச முடியுது....வைரவியின் குரல் எல்லாம் நல்லா கேக்குது!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பப்பீஸ் எல்லாமே மன்னிப்புக் கேட்பார்கள், பூஸ்களில் சிலபேர் மட்டுமே இப்படி... அது நான் விளையாடுவதால் அவவும் அப்படி தன்னை ஒரு மனிதராவே நினைக்கிறா.

      மிக்க நன்றி கீதா.

      Delete
  35. பதிவினை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மொகமட் ... அமைதியாக வந்து போயிருப்பதைப் பார்க்கும்போது செல்லப்பிராணிகள் பிடிக்காதோ எனும் டவுட் வருதே...
      மிக்க நன்றி மொகமட்.

      Delete
  36. வந்து பார்த்தபோது கொமண்ட் பாக்ஸ் காணவில்லை. என்ன நடக்குது இங்கன... லேட்டாயிடுத்து போல.
    ஆனாலும் எண்டர் கொடுத்தாச்சு.
    எங்க வீட்டில் இப்படி பொட்டு இல்லை. நாங்க தனிதீவு.நடுவில வீடு சுற்றிவர வீதி.ஆனாலும் விடமாட்டமில்ல. வாசலால் ரோட்டுக்கு போனால் அப்பாவுக்கு தெரியும் என்பதால் பொட்டு வைச்சு அதுக்குள்ளால ஒழுங்கைக்கு போய் அப்படியே மெயின் ரோட்டுக்கு போறது. ப்ரெண்ட் வீட்டிலிருந்து (பக்கத்திலதான்) வேலி பொட்டுக்குள்ளாக போய், அடுத்தடுத்த வீடும் பொட்டு தான் பாதை. அதையெல்லாம் மறக்கமுடியா நினைவுகள்.
    நீங்க சொன்னமாதிரி ஆச்சி (வீட்டில் வயதானவங்க இருந்தா) கற்கண்டு தோடம்பழ இனிப்பு இப்படியானவை தருவாங்க.

    எங்கட வீட்டில நின்றவங்க வீட்டு உறுப்பினர்களை விட அதிகம். பசு (அவாவின் பெயர் செல்வி) ஒரே ஒரு ஆள்.அவாதான் எங்க வீட்டு மகராசி. பூசாரும் ஒரு ஆள். ஆவா எங்க வீட்டு செல்லம்.(ரோசி) பப்பிமார் நாங்க வளர்த்தவை 3பேர். வந்தவை 3பேர்.
    எனக்கும் அல்ஷேசன் வளர்க்க ஆசை.ஆனா அப்பா விடவில்லை. ஆசைக்கு பொமரேனியன் வளர்த்திட்டன். உங்க வீட்டு பப்பி மாதிரிதான். அவரும். பெயர் விது. ம்..ம்ம் பழையதெல்லாம் எழுதி ஞாபங்களை மீட்டுவிட்டீங்க. மறக்கமுடியாதவை திரும்பவராத நாட்கள். பொன்னான காலம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ...
      மேலே கீதாவுக்கு கொடுத்த என் பதில் பாருங்கோ. எனக்கும் இம்முறை திடீரென இப்போஸ்ட் கொமெண்ட்ஸ் மட்டும் என்னமோ ஆச்சு... ஆனா மொபைலில் எல்லாம் ஓகே.

      என்னாதூஊஉ ஊரில தனித்தீவோ? ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)... அப்பாவுக்கு நல்லாத்தான் டிமிக்கி விட்டிருக்கிறீங்க:)... வாசலால்தானே வெளியே போகக்கூடாது? நாங்க பொட்டுக்குள்ளால போவமே ஹா ஹா ஹா:)

      உங்க வீட்டு உறுப்பினர் பட்டியல் மிக நீளமா இருக்கே:)...
      மிக்க நன்றி அம்முலு.

      Delete
  37. எங்க என் கொமண்ட்..... காணல. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கொம்பியூட்டரில் காட்டுதில்லை ஆனா மொபைலில் காட்டுது அம்முலு.. சிலநேரம் நாளைக்கு சரியாகிடும்.. கொம்பியூட்டரூடாக பதில் போடுறேன்.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.